1கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் & தீவிர சிகிச்சை மையம் அமைச்சர் திறந்து வைத்தார்!

பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் 1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்தார்.;

Update: 2021-06-07 17:40 GMT

பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் 1கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வளாகத்தை தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கும் எல்.என்.டி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 1 கோடி மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் பொன்னேரி தலைமை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டது. தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் ரிப்பன் வெட்டி மருத்துவமனையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

மேலும் கொரோனா நோயாளிகளுக்கான தீவிர சிகிச்சை மையம் வளாகத்தையும் திறந்து வைத்தார். பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இதன் மூலமாக ஆக்சிஜனை சுயமாக உற்பத்தி செய்து கொண்டு நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கப்பெறும்.

இதனால் நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை குறையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன், பொன்னேரி தலைமை மருத்துவர் அனு ரத்னா, பொன்னேரி காவல் துணை கண்காணிப்பாளர் கல்பனா தத் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News