லட்சு பாலவாக்கத்தில் காவல் உதவி மையத்தை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
Milk Minister of Tamilnadu- லட்சுபாலவாக்கம் பஜார் தெருவில் மூன்று சாலைகள் இணையும் சந்திப்பில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
Milk Minister of Tamilnadu- ஊத்துக்கோட்டை அருகே லட்சுபாலவாக்கம் பஜார் தெருவில் கண்காணிப்பு கேமராக்கள் வசதியுடன் காவல் உதவி மையத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஊத்துக்கோட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லட்சுபாலவாக்கம் பஜார் தெருவில் மூன்று சாலைகள் இணையும் சந்திப்பில் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறக்காவல் நிலைய காவல் உதவி மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு,தமிழ்நாடு வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சௌந்தரராஜன்,தமிழ்நாடு அடகு மற்றும் நகை வியாபாரிகள் சங்க தலைவர் சுவாமி தேஜானந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அனைவரையும் ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு என்.சி.சாரதி, ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வரவேற்றனர். இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு காவல் உதவி மையத்தை திறந்து, குத்து விளக்கு ஏற்றி வைத்து கண்காணிப்பு கேமராவின் இயக்கத்தை பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில்,தமிழ்நாடு வணிகர் சங்க பாதுகாப்பு பேரவை பொதுச் செயலாளர் கே.தேவராஜ், ஒருங்கிணைப்பாளர் பி.தேவராஜ்,செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்அந்தோணி,துணைப் பொதுச் செயலாளர் பசும்பொன் இரா.லெனின் திமுக எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜே. மூர்த்தி பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர்.
பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழக்கறிஞர் ஜான் எம்.பொன்னுச்சாமி,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி. லோகேஷ்,லட்சுபாலவாக்கம் அனைத்து வியாபாரிகள் சங்க கௌரவ தலைவர் பி.டி.பாலசுப்பிரம ணியம், தலைவர் பி.ஆனந்தன், துணைத் தலைவர் எம்.குமரன், செயலாளர் கே.எல்.டி.பழனி, துணைச்செயலாளர் வி.கோபி, பொருளாளர் ஆர்.பி.சென்னாராம்,இணைச் செயலாளர் பி.மணி மற்றும் சங்க உறுப்பினர்கள், வியாபாரிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2