கும்மிடிப்பூண்டியில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு
எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கும்மிடிப்பூண்டி அதிமுகவினர், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில், வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு, ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன் தலைமையில் ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் அதிமுக கிளை செயலாளர்கள் சீனிவாசன், ராமதாஸ், நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, தமிழ் மன்னன், வடமதுரை பாலாஜி, சரவணன், நாகப்பன், முருகன் ஜெகதீஷ் எம்.ராஜா ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.