லஞ்சம் வாங்கியதாக மாதர்பாக்கம் வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் வனச்சரக அலுவலகத்தில் வனச் சரகரான ஞானப்பன் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.;
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கத்தில் உள்ள வன சரக அலுவலகத்தில் ஆந்திர மாநிலம் வரதையப்பாளையத்தை சேர்ந்த முனிபாபு என்கிற செம்மர வியாபாரி, செம்மரங்களை ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வர அனுமதி சீட்டில் ஒப்புகை கேட்டு சிபாரிசு வந்திருந்தார். அப்போது அவரிடம் சீல் வைத்து ஒப்புகை தர 5ஆயிரம் ரூபாயை வன சரகர் ஞானப்பன் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து முனிபாபு, தனது ஜெ.எஸ்.எஸ்.என் நிறுவனத்தின் மேலாளரின் மூலம் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராமசந்திர மூர்த்திக்கு தகவல் அளித்தார்,. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் மூலமாக ரசாயன பவுடர் தடவிய 5ஆயிரம் ரூபாயை வனச்சரகர் ஞானமணியின் ஓட்டுநரான யுவராஜிடம் கொடுத்தனர்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் ஞானமணி, மற்றும் யுவராஜை கையும் களவுமாக பிடித்தனர். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் 3 மணி நேரமாக விசாரணை நடத்தி அவர்களை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி வனசரகர் ஞானமணி மற்றும் அவரது ஒட்டுநர் யுவராஜ் லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.