ஆத்துப்பக்கம் கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

நெ.62.ஆத்துப்பக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-05-09 01:45 GMT

கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் எண் 62 ஆத்துபக்கம் கிராமத்தில் புதிதாக அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த 28ஆம் தேதி அன்று தொடங்கி நாள் தோறும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் 5:00 மணிக்கு மங்கல இசை கணபதி ஹோமம் பிம்பசுத்தி சுஷ்பரிசாஹீதி நாமகரணம் ரசஷ்சாபந்தண்ம் நாடு சந்தனம் நவக்கிரக ஹோமம் பூர்ணாகுதி உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது 10.15 மணி அளவில் யாகசாலை இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை கொண்டு கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.

பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆலயத்தில் உள்ள மூலவருக்கு பால் தயிர் சந்தனம குங்குமார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அத்திப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா ஞானமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பா முருகன் மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News