எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு

எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-04-17 02:45 GMT

எல்லாபுரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எம்.மகேந்திரன்.

அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக மகேந்திரன் அதிமுக தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக மகேந்திரன் அறிவித்துள்ளது. எல்லாபுரம் பகுதி அதிமுக தொண்டர்களை பெரும் மகிழ்ச்சிக்குள் ஆளாக்கி உள்ளது.

இதனை முன்னிட்டு புதிதாக ஒன்றிய செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எம்.மகேந்திரன் வடமதுரை ஊராட்சி அரசு தொடக்கப் பள்ளி அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து அவருக்கு அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் ராஜீவ் காந்தி, நாகப்பன், ராமதாஸ், ஜெகதீசன் பாலாஜி மீன் ரவி,ராஜா, நாதன்,ஹரி, பாஸ்டர் பால் ரகு, புஷ்பராஜ் உள்ளிட்டோர் மகேந்திரனுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News