பிளைவுட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
கவரப்பேட்டையில் ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு பிளைவுட் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு;;
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு அதிக எடையுடன் பிளைவுட் ஏற்றி வந்த லாரி கவரப்பேட்டை பழைய காவல் நிலையம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏறும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, திடீரென இடது பக்கமாக சாய்ந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் வாகனங்கள் குறைவாக சென்றதால் விபத்தும் உயிர் சேதமும் ஏற்படவில்லை. அதைப்போல் வாகன ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அதிக எடையை ஏற்றி வரும் வாகனங்களை அதிகாரிகள் முறையாக பரிசோதனை மேற்கொள்ளாமல் அலட்சியப் போக்கை கடைபிடிப்பதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.