வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
பெரியபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் கட்டாயமாக போலீசார் ஈடுபட வேண்டும்;
பெரியபாளையம் பகுதியில் மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 1சவரன் நகை, 1கிலோ வெள்ளி மற்றும் 30,000 ரொக்கம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் கணவர் ஏகாம்பரம் பத்து வருடங்களுக்கு முன்பு இழந்துவிட்ட அவரது மனைவி சரசா (67) என்பவர் தனியாக வசித்து வருகிறார்இவர்களுக்கு 5 மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர் இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பேத்தியின் பிரசவத்திற்கு சரசா சென்றிருந்தார்.பின்ன வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 1 சவரன் நகை ,1 கிலோ வெள்ளி பொருட்கள்,மற்றும் 30,000 ரொக்கம் திருடப்பட்டடது தெரிய வந்தது.
இதனை அடைத்து பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் காவல் நிலையம் அருகே பாப்பம்மா என்கின்ற மூதாட்டி செங்குன்றம் அடுத்த புழல் பகுதியில் தன் மகள் வீட்டிற்கு சென்ற போது அவரது வீட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பூஜை பொருட்களான பித்தளை வெள்ளி பொருட்கள் பீரோவில் இருந்த 12 ஆயிரம் ரொக்க பணம் நாற்பதாயிரம் மதிக்கத்தக்க நான்கு பட்டு புடவைகளையும் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் பெரியபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் கூறுகையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் சரியாக ஈடுபடு வதில்லை என்றும், இன்னும் ஒரு மாசம் கடந்த நூறாண்டு காலத்தில் பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகளில் தொடர் திருட்டுகள் நடைபெறுவதாகவும் இரண்டு மாதத்திற்கு முன்பு ஆரணி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் தாக்கி வீட்டில் ரொக்கம் நகை உள்ளிட்டவை திருடிச் சென்றனர் எனவே இரவு நேரங்களில் பெரியபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் கட்டாயமாக போலீசார் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.