ஊராட்சிக்கு வரி செலுத்தாத தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை
கும்மிடிப்பூண்டி அருகே கும்புளி கிராமத்தில் ஊராட்சிக்கு வரி செலுத்தாத தனியார் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்;
போராட்டத்தில் ஈடுபட்ட ஏடூர் ஊராட்சி பொதுமக்கள்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் ஊராட்சியில் 1000 க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான மக்கள் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த ஊராட்சியில் மட்டும் ஏடூர், கும்புளி என்ற பல்வேறு பகுதிகள் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு தொழிற்சாலைகளும், எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் இல்லாததால் நிதி நெருக்கடி காரணமாக போதிய வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கு ஊராட்சியில் வருவாய் இல்லை
இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கும்புளி கிராமத்தை ஒட்டி இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் அவர்களின் சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது. அதில் ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் மின் வசதி உள்ளிட்ட அனைத்தும் ஊராட்சி ஒப்புதலோடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் சார்பாக மேற்கண்ட ஆராய்ச்சி நிறுவனத்திடம் முறையாக வரி செலுத்த வேண்டும் என பலமுறை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊர் பொதுமக்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்பு முற்றுகையிட ஒன்றுகூடினர். இதையறிந்த ஆரம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது, இந்த பகுதி ஏற்கனவே பின்தங்கியுள்ளது. இது போன்ற நிறுவனங்கள் வரி செலுத்தாததால் எங்கள் வாழ்வாதாரமும் பின்தங்கியுள்ளது. மேலும் சட்டத்துக்குப் புறம்பாக 300 அடிக்கு மேல் போர்வெல் அனுமதி இல்லாமல் போடப்பட்டுள்ளது ஆரம்பாக்கம் போலீசாரிடம் எடுத்துரைத்தனர்
அதற்கு போலீசார் உடனடியாக மேற்கண்ட நிர்வாகத்துடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்த பின்னர். கூட்டம் கலைந்து சென்றது இதனால் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.