ராள்ளபாடி பகுதியில் கால்வாயில் நடைபெறும் மணல் கொள்ளை: காவல்துறை தடுக்குமா?

ராள்ளபாடி பகுதியில் சின்னம்பேடு ஏரிக்கு செல்லும் கால்வாயில் நடைபெறும் மணல் கொள்ளையை காவல்துறையினர் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-03-08 02:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் குமரப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ராள்ளபாடி கிராமம் உள்ளது. பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் மழை காலங்களில் மழை நீர் கரை புரண்டு பெருக்கெடுத்து ஓடும். ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை நிரம்பினால், அதிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், பேரண்டூர், ஆத்துப்பாக்கம், ஏனம்பாக்கம் வழியாக பெரியபாளையம், பாலேஸ்வரம், குமரப்பேட்டை, ஆரணி ஏ,என் குப்பம், புதுவாயல் வழியாக வங்கக்கடலில் சென்று சேரும்.

இந்த நிலையில் இந்த உபரி நீர் கடலில் சென்று சேர்ந்து வீணாவதை தடுக்க கடந்த திமுக ஆட்சியில் ஆரணி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டது. இந்த தடுப்பனைகளில்  தண்ணீரில் சேமித்து வைத்து விவசாயம் குடிநீர் நிலத்தடி நீர் ஆதாரமாக இருக்கிறது.

அதிக அளவில் தண்ணீர் வரும்போது இந்த தண்ணீரை வீணாகாமல் தடுக்க பெரியபாளையம் பகுதியில் இருந்து சின்னம்பேடு ஏரிக்கு செல்லும் கால்வாயில் சுமார் 22 கிலோமீட்டர் தூரம் தண்ணீர் பாய்ந்து சின்னம்பேடு பெரிய ஏரியில் இருப்பு வைத்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் காலாகாலமாக விவசாயம் செய்து வருவது வழக்கம்


கடந்த முறை பல லட்ச ரூபாய் செலவில் சின்னம்பேடு ஏரி கால்வாய் கரைகளை பலப்படுத்தி, கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதிக விலைக்கு மணல் விற்பதற்காக இதனைப் பயன்படுத்தி பெரியபாளையம் அருகே ராள்ளபாடி தனியார் பள்ளி எதிரே பல பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளையர்கள் சின்னம்பேடு கால்வாய் கரையை பெரிய அளவில் சேதப்படுத்தி அதிலிருந்து மணல் கொள்ளையடித்து அதிக விலைக்கு விற்று வருகின்றனர்

மணலை எடுத்துவிட்டால்,  மழைக்காலங்களில் இக்கால்வாயில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர், ஊருக்குள் வரும் அபாயமும் உள்ளது. இந்த கால்வாய்க்கு அருகிலேயே  பெரியபாளையம் காவலர் குடியிருப்பு  மற்றும் காவல் நிலையம் உள்ளது.  இந்த மணல் கொள்ளை தினந்தோறும் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தெரிந்தும் இதனை தடுக்க வேண்டிய கண்டு கொள்வதில்லை  கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

எனவே பல லட்ச ரூபாய் செலவு செய்து பலப்படுத்தப்பட்ட கால்வாய் கரைகளை, மணல் கொள்ளையர்கள் சேதப்படுத்தி வருவதை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News