திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: மாணவன் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாநவீனுக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது.
இந்த திருமண மண்டபத்தில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கம் இந்த திருமண மண்டபத்தில் சமையல் செய்வதற்கு தனி இடம் கீழே ஒதுக்கப்பட்டு அங்கிருந்து சாதம், சாம்பார், பொரியல் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை லிப்ட் மூலமாக ஏற்றுக்கொண்டு விருந்தாளிகளுக்கு உணவு பரிமாறுவது வழக்கம். தொடர்ந்து வழக்கம் போல் மேற்கண்ட திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி ஒன்றுசேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை 6 மணியளவில் தொடங்கியது.
அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மணமக்களை வாழ்த்தி உணவு அருந்தி கொண்டிருந்தனர். பின்னர் உணவு பற்றாக்குறை காரணமாக கீழே உள்ள உணவை சுமார் 4 பேர் லிட்டில் ஏற்றி வந்தனர். அப்போது திடீரென லிப்ட் ரோப் அறுந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த சிப்காட் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மீதமுள்ள மூன்று பேரை சிறு காயங்களுடன் மீட்டு பொன்னேரி மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தியதில் குமரன் நாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் கேட்டரிங் சர்வீஸ் வேலை பார்ப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பகுதியைச் சேர்ந்த சீத்தால் (19) அதே பகுதியில் மாசிலாமணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருவது தெரியவந்தது. தற்போது இவர் லிப்ட் அழந்து விழுந்து பலியானார் என்பதும் தெரியவந்தது. அத்தோடு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் (21), ஜெயராமன் (25) ஆகியோர் காயங்களுடன் பொன்னேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விசாரணையில் திருமண மண்டபத்தில் உள்ள லிப்ட் தரம் சரியாக உள்ளதா என கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.