கும்மிப்பூண்டி தேமுதிக வேட்பாளர் தீவிர பிரசாரம்

கும்மிடிப்பூண்டி தேமுதிக கழக வேட்பாளர் கே.எம். டில்லி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெயிலிலும் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-04-03 01:15 GMT

தமிழகத்தில் 6ம் தேதி ஒரோ கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேமுதிக, அமமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் கே.எம். டில்லி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கொளுத்தும் வெளியிலும் திறந்த வேனில் கேப்டன் அவர்களின் வாக்குகளை மக்கள் செல்வர் டி.டி.வி தினகரன் அவர்களின் வாக்குறுதிகளையும் எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார்.

எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அமைந்தநல்லூர் தண்டலம், ஆத்துப்பாக்கம், வண்ணாங்குப்பம், தும்பாக்கம், திருநிலை, பனையஞ்சேரி, கோசவன்பேட்டை ஆகிய 22க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தெரு தெருவாக சென்று கொட்டும் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது அனைத்து பகுதிகளிலும் வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி பட்டாசுகள் வெடித்து ஆர்த்தி வரவேற்றனர்.

Tags:    

Similar News