பெரியபாளையம் அருகே வட மதுரையில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-10-22 10:00 GMT

நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மங்கல இசை,அனுக்ஞை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், புதிய சுவாமிகள் கரி கோலம் அஷ்ட பாதச்கிரியை பூரணாஹூதி,  வாஸ்து சாந்தி, பிரவேச பலி ,ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, யாத்ராதானம் உள்ளிட்ட பூஜைகள் நடந்த முடிந்த பின்னர் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து நிரப்பி வைக்கப்பட்டிருந்த நீரை நிரப்பி பூஜையில் இருந்த கலசங்களை சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து மேல தாளங்கள் முழங்க கோவில் சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கும், மூலவர் நாகாத்த அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர் பின்னர் அங்கு வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.


இதனையடுத்து மூலவர் நாகாத்த அம்மனுக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர்,ஜவ்வாது,தேன், பன்னீர்,இளநீர்,மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடையில் வண்ண பூக்களால் அலங்காரம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி,ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி,மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், வடமதுரை ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன், இ.கே.முரளி, கல்பட்டு வெங்கடேசன், பார்த்திபன், ஹரி, சிலம்பரசன் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், நித்தியானந்தன் சாந்தி, மற்றும் கிராம பொதுமக்கள்,மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News