கோவில் கும்பாபிஷேக விழாவில் வீர தமிழர் இந்து சேனா அமைப்பு பங்கேற்பு
திருக்கண்டலம் கோவில் கும்பாபிஷேக விழாவில் வீர தமிழர் இந்து சேனா அமைப்பு பங்கேற்றனர்.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் திருக்கண்டலம் ஊராட்சி மடவிளாகம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாமாருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு நல்லூர் ஊராட்சி பெருமாள்அடி பாதம் பகுதியில் இயங்கிவரும் வீர தமிழர் இந்து சேனா அமைப்பின் நிறுவனர் தென்னரசுஜி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் மாநில நிர்வாகிகள் பழனி, சுரேஷ்குமார், அருண்குமார், மாவட்ட நிர்வாகிகள் தேவராஜ், சுரேஷ், சுரேஷ், மாவட்ட அமைப்பாளர் சுப்பிரமணி, ராஜேஷ் உள்ளிட்ட இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.