பெரியபாளையம் அருகே வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

பெரியபாளையம் அருகே மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-07 07:15 GMT

பெரியபாளையம் அருகே வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

திருக்கண்டலம் மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து, வழிபட்டனர். 

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்திற்கும் உட்பட்ட மதுரா மேட்டுப்பாளையம் கிராமத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலை கிராம மக்கள் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 5.ஆம் தேதி அன்று முதல் ஆலயத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் அனுக்கை விஷவக்சேன ஆராதனம், புண்ணியா வசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மகா சங்கல்பம், லட்சுமி பூஜை, கண்ணிய பூஜை, நடைபெற்றது. இன்று 7.தேதி கோ பூஜை சுப்ரபாத சேவை,மஹாபூர்ணாவுதி, நடந்து முடிந்த பின்னர் கலச புறம்பாடு நடைபெற்றது.

இதில் புண்ணிய நதிகளிலி ருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை மேளதாளங்கள் முழங்க பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் சுற்றி வளம் வந்து 9 மணி அளவில் ஆலயத்தின் மீதுள்ள கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். பின்னர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு ஆலய சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட சிறப்பு ஆய்ப்பாளர்களுக்கு ஆலயத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மதன் சத்யராஜ், மற்றும் கிராம பொதுமக்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Similar News