கவரப்பேட்டை ரயில் விபத்து சீரமைப்பு பணிகள் முடிவு: மீண்டும் ரயில்கள் இயக்கம்

கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் ரயில்கள் மோதி விபத்திற்கு பின் சீரமைப்பு பணங்கள் முடிவற்ற நிலையில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

Update: 2024-10-13 05:00 GMT

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் முடிந்து 24 மணி நேரத்திற்கு பிறகு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரில் இருந்து பெரம்பூர் வழியாக கவரப்பேட்டை நோக்கி பீகார் மாநிலம் தர்பாகாவிற்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் மோதி ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் 7 பெட்டிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து எறிந்தன. இதனைக் கண்ட அப்பகுதியை பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் போர்க்கால அடிப்படையில் விபத்தில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டு சிறு காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நபர்களை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சென்னை, விஜயவாடா, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட நிலையில். ரயில்வே ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் நேற்று மாலை 11 எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து தண்டவாள சீரமைப்பு பணிகளும் மின்சார வயர் சீர் அமைப்பு பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்றன. சென்னைக்கு செல்லக்கூடிய அப்ளைனில் ரயில்வே ஊழியர்கள் தொடர்ச்சியாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

சென்னை செல்லும் பாதையில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு பிறகு நிஜாமுதீனிலிருந்து சென்னைக்கு செல்லக்கூடிய ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து நடைபெற்ற கவரைப்பேட்டை ரயில் நிலையத்தை முதல் ரயிலாக கடந்து சென்றது.

தொடர்ச்சியாக அடுத்தடுத்த ரயில்கள் சென்னை நோக்கி செல்லத் தொடங்கின. சென்னையில் இருந்து வரக்கூடிய மற்றொரு பாதையை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News