ஊத்துக்கோட்டையில் ஜமாபந்தி நிகழ்ச்சி
Today News in Thiruvallur District -ஊத்துக்கோட்டை தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தி தொடக்க நாளில் 71 மனுக்கள் அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கினர்.;
ஜமாபந்தி நிகழ்ச்சியில் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கிய பொதுமக்கள்.
Today News in Thiruvallur District - திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் 1431 - ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு எனும் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை வகித்தார். ஊத்துக்கோட்டை. வட்டாட்சியர் ரமேஷ் , தனி வட்டாட்சியர் லதா, மண்டல துணை வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று ஊத்துக்கோட்டை , தாராட்சி, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர், பனப்பாக்கம் , சென்னங்காரணை, தொளவேடு, தண்டலம், பருத்திமேனி, தும்பாக்கம் , காக்கவாக்கம் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் , பட்டா மாற்றம் 31 பேரும், முதியோர் உதவித்தொகை 2 பேரும் , இதர மனுக்கள் 38 பேர் என 71 மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினார் .
மேலும் மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஜமாபந்தியில் போது நஞ்சை நில விவசாயிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட விவசாய சங்க தலைவர் சம்பத் , நஞ்சை நில விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் குணசேகரன், சசிகுமார் ஆகியோர் கற்றோர் முதல் சித்தூர் வரை ஆறு வழிச்சாலைக்காக எடுக்கப்பட்ட நிலம் முப்போகம் விளையக்கூடிய நிலம் என்பதற்கான ஆதாரத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். நிகழ்வில் வட்ட வழங்கல் அலுவலர் ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2