ஈகுவார்பாளையம் ஊராட்சியில் வீட்டு மனைப் பட்டா வழங்கல்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியில் வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-05-31 02:30 GMT
ஈகுவார்பாளையம் ஊராட்சியில்  வீட்டு மனைப் பட்டா வழங்கல்

ஈகுவார்பாளையம் பகுதியில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

  • whatsapp icon

Tiruvallur District Tamil News - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஈகுவார்பாளையம் பகுதியில் மாநெல்லூர், ஈகுவார் பாளையம், சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் மரக்கன்று, நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ்(பொறுப்பு) தலைமை தாங்கினார். மாவட்ட மக்கள் தொடர் அதிகாரி பாபு வரவேற்புரை நிகழ்த்தினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் சாமுநாசர், மாவட்ட சேர்மன் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் கலந்து கொண்டு ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பாக்கம் பகுதியை சேர்ந்த 63 பயனாளிக ளுக்கும், மாநெல்லூர் ஊராட்சிக்கு ட்பட்ட 43 பேருக்கு இலவச வீட்டு மனைபட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை 20 பேருக்கும், ஸ்மார்ட் கார்டு 18 பேருக்கும் வழங்கப்பட்டது.

இதில் கும்மிடிப்பூண்டி ஆணை யாளர் வாசுதேவன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஈகுவார் பாளையம் உஷா ஸ்ரீதர், மாநெல்லூர் லாரன்ஸ் என பலர் கலந்துக் கொண்டனர்.

முடிவில் ஈகுவார்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் உஷாஸ்ரீதர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News