கும்மிடிப்பூண்டி அருகே மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு
Welfare Schemes In Tamil Nadu - கும்மிடிப்பூண்டி அருகே மக்கள் நலத்திட்டங்கள் துவக்கி வைப்பு நிகழ்ச்சியில் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.;
Welfare Schemes In Tamil Nadu - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநல்லூர் ஊராட்சியில் உள்ள விவேகானந்த நகரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது கழிப்பிட கட்டிடம் திறப்பு விழா மாநல்லூா் ஊராட்சிமன்ற தலைவர் லாரன்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு புதிய குடிநீர் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிட கட்டிடத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2