ஊத்துக்கோட்டை அருகே புதிய பள்ளி கட்டிட திறப்பு விழா
ஊத்துக்கோட்டை அருகே மாம்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடத்தை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த மாம்பாக்கம் ஊராட்சியில் 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் பொற்கொடி தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கொண்ட அரசு பள்ளி கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு அறுசுவை உணவு, நோட்டு,பேனா, புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இதில் பூண்டி ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான் பொன்னுசாமி, விசிக மாநில அரசியல் குழு தலைவர் நீல வானத்து நிலவன், மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அசோக் ஆகிய உட்பட பல ர் கலந்து கொண்டனர்.