கவரப்பேட்டையில் 250 குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் நிவாரண உதவி
கவரப்பேட்டை பஜாரில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 250 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.;
கவரப்பேட்டையில் 250 குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் நிவாரண உதவி வழங்கிய காட்சி.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் திரிபுரசுந்தரி அவரது சொந்த செலவில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.
இதை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே கோவிந்தராஜன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.