கும்மிடிப்பூண்டி க்ரைம் செய்திகள்
சிப்காட் தொழிற்பேட்டையில் துத்தநாகம் திருட்டு, கத்தியை காட்டி இருசக்கர வாகனம் திருட்டு
கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கத்தியை காட்டி இருசக்கர வாகனம் திருட்டு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரதை கார்த்திகேயன் வயது 47 என்பவர் பணி நிமித்தமாக சிப்காட் தொழிற்பேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலையில் கார்த்திகேயனை வழிமறித்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் கார்த்திகேயனிடம் கத்தியை காட்டி இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கடத்தல் கும்பல் கவரப்பேட்டையை நோக்கி சென்றதை அடுத்து அவ்வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்கள் கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிக அளவில் நடைபெற்று வருவதாக பலரும் புலம்புகின்றனர். எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 200 கிலோ துத்தநாகம், ஜிங் திருட்டு.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ஜெயம் கால்வனைசர்ஸ் என்ற தனியார் தொழிற்சாலையில் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் மதிப்புள்ள 200 கிலோ எடை கொண்ட 8 துண்டுகள் துத்தநாகம் ஜிங் பொருளை வெட்டி எடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலை மனிதவள மேலாளர் துளசிங்கம்
தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இரவு காவலாளிகள். இளம்பருதி, குமார், சிவகுமார், எலக்ட்ரீஷியன் கார்த்திக், மெட்ராஸ் ஐட்ராலிக் ஹோஸ் கம்பெனியின் பாதுகாவலர் சீனிவாசன் மற்றும் வீல்ஸ் இந்தியா பிரைவேட் கம்பெனியின் லாரி ஓட்டுநர் உட்பட ஆறு பேர் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.