கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்புத்துறையினரின் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி

கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைப்பெற்றது.

Update: 2022-04-17 02:45 GMT

கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  நடைப்பெற்ற தீத்தடுப்பு ஒத்திகை.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணை ப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சார்பில்  தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைப்பெற்றது.

தமிழ்நாடுதீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பாக வருடந்தோரும் ஏப்ரல் 14 முதல் 20 முடிய ஒரு வாரத்திற்கு பள்ளிகள், கல்லூரிகள், பொது மக்கள் கூடும் இடங்கள், இரயில் நிலையம், பேருந்து நிலையம், தொழிற்சாலை மற்றும் குடிசைப் பகுதிகளில் தீ தடுப்பு பிரச்சாரம், ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல் ஆகியவைகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

இந்த தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு கிரீன் சிக்னல் பயோ பார்மா பிரைவேட் லிமிடெட் என்ற தனியார்தொழிற்சாலையில் தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு வகுப்பு, ஒத்திகை பயிற்சி மற்றும் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல் ஆகியவை கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷ. செல்வராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.

Tags:    

Similar News