பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார் கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.
ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.மிதிவண்டிகளை வழங்கினார்.;
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. மிதிவண்டி வழங்கினார்.
ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 366 மாணவி, மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் கலந்து கொண்டு மிதிவண்டிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற காலத்திலிருந்து தற்போது வரை மக்களுக்கு தேவையான தேவைகளை குறித்து ஒவ்வொரு திட்டத்தையும் நமது முதல்வர் சிந்தித்து செயல்பட்டு செய்து வருவதாகவும், கல்விக்கு முதன்மையிடம் கொடுத்து ஏழை மாணவர்கள் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் நினைத்து ஒவ்வொரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்றும், விரைவில் பெண்களுக்கு ரூபாய் 1000.உரிமை தொகை வழங்க உள்ளார்.
விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, படிக்கின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ஒன்றல்ல இரண்டல்ல சொல்லிக் கொண்டே போகலாம். மற்ற மாநிலங்கள் தமிழகத்தை திரும்பிப் பார்க்கின்ற அளவிற்கு நம் முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் மக்களுக்காக சிந்தித்து தாய் உள்ளத்தோடு செயல்படுத்தி வருகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பி.ஜே.மூர்த்தி, பூண்டி டி. கே.சந்திரசேகர், பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், பெற்றோராசு கழக தலைவர்கள் சம்சுதீன், தமிழ்ச்செல்வன், மற்றும் ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.