கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2023-06-15 10:26 GMT

திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வரவேற்பு அளித்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பரணம்பேடு அரசு துவக்கப்பள்ளியில் மேளதாளங்களுடன் மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் கடந்த 12ந்தேதி ஆறு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 14ம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட போது பல பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் மலர்கள் கொடுத்தும் வரவேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பரணம் பேடு அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 25- க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பள்ளி துவக்க விழாவான நேற்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது பள்ளிக்கு புதுவரவுகளாக இணைந்த எட்டு மாணவர்களை பள்ளி நிர்வாகம் மேள தாளங்களுடன் தலையில் கிரீடம் வைத்து மாலை அணிவித்து வீடு வீடாக சென்று பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

மேலும் புதிதாக பள்ளியில் இணைந்த எட்டு மாணவர்களுக்கு பள்ளி உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு அப்பகுதியில் நல்ல வரவேற்பு பெற்றது. நிகழ்வில் கற்றலும் கற்பித்தாலும் அறக்கட்டளை நிறுவனர் தளபதி சுந்தரம், கோங்கல் விமல், ஏனதிமேல் பாக்கம் சுகுமார், தலித் ஐயா, பரணம் பேடு மாரி, மணிகண்டன், சரத்குமார், லோகரதன், தலைமை ஆசிரியர் நா.ஈஷ்வரி உதவி தலைமை ஆசிரியர் சுபசக்தி ஆகியோருடன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News