பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளை
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.;
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தண்டுமேடு பகுதியை சேர்ந்த ராஜி என்ற பெண், கணவர் இறந்த நிலையில் மகன் திருமணமாகி சென்ற நிலையில் தனியாக வசித்து வருகிறார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட இவரது சகோதரருக்கு உதவி செய்வதற்காக கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மறைமலைநகர் சென்றிருந்தார்.
காலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32சவரன் தங்க நகைகள், 1.5கிலோ வெள்ளி பொருட்கள், 11000 ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.