ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம், பள்ளி மாணவர்களுக்கு எம்பி சசிகாந்த் செந்தில், ஊக்கத் தொகை வழங்கினார்.

Update: 2024-08-22 09:30 GMT

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வாய் கிராமத்தில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு  பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிய எம்பி சசிகாந்த் செந்தில்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தேர்வாய் கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை. அன்னதானம்  எம்பி சசிகாந்த் செந்தில் வழங்கினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80.ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்,தேர்வாய் கிராமத்தில் 10,11,12 வகுப்பு தேர்வில் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்துகொண்டு நிகழ்ச்சியின் முன்னதாக கிராமத்தில் உள்ள சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு, ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி. பின்னர் தனக்கு வாக்களித்த அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து 10,11,12 வகுப்பு பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் தேர்வாய் ஊராட்சி மன்ற தலைவர் முனிவேல், வழக்கறிஞர் வேணுகோபால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இனிய மணி, ஜெயசூர்யா, கௌதம் ராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News