அழகு சாதன பொருட்கள் வாங்க சென்ற பெண் மாயம்

அழகு சாதன பொருட்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற பெண் மாயமானதாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை.;

Update: 2021-04-24 02:30 GMT

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42).  இவரது சித்தி மகள் வர்ஷா (22). நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் வீட்டிலிருந்து பாதிரிவேடு சென்று அழகுசாதனப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற வர்ஷா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் விசாரித்துப் பார்த்துள்ளார்.  எங்கும் வராததால் அதிர்ச்சி அடைந்த சங்கர், பாதிரிவேடு காவல் நிலையத்தில் தனது சித்தி மகள் காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News