ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி; கொலை செய்த இருவர் கைது
Rape Case News -கும்மிடிப்பூண்டி அருகே ஏரியில், பள்ளி மாணவி சடலமாக மீட்கப்பட்டார். இந்த மாணவியை கொலை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.;
மாணவியை கற்பழித்து கொலை செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
Rape Case News - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகா. இவர் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் செல்வராஜ்(45) என்பவருடன் திருமணம் ஆகி, இவருக்கு உஷா என்ற மகள் உள்ளார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணத்தினால், அவரைப் பிரிந்து மகள் உஷாவுடன் தனது தாய் வீடான நெல்வாய் கிராமத்தில், தனியாக வசித்து வந்தார்.
இவரது மகள் உஷா, பெரியபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12ம் தேதி அன்று, வீட்டை விட்டு வெளியே சென்ற உஷா வீடு திரும்பவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் திலகா, ஊத்துக்கோட்டை போலீசில் புகார் அளித்திருந்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கொள்ளானுர் ஆராமணி ஏரியில், இளம் பெண் ஒருவர் காயங்களுடன் ஏரியில் இறந்து கிடப்பதாக அவ்வழியாக செல்லும் சிலர், பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற பாதிரிவேடு போலீசார் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இதுகுறித்து சிறுமியின் தாய் திலகாவிடம் நடத்திய விசாரணையில், தன் மகள் உஷா செல்போனில் பல மணி நேரம் பேசி வந்ததாகவும், இதைப் பற்றி பலமுறை தன் மகளை கண்டித்ததாகவும். அவள் சில தினங்களுக்கு முன்னர் வெளியே சென்று பின்னர் காணாமல் போனதாகவும் அது தொடர்பாக ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். செல்போனை தடயமாக வைத்து விசாரணையில் களமிறங்கிய பாதிரிவேடு போலீசார், மூக்கரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (19) என்பவரை கைது செய்த போலீசார் அவனுடன் கூட்டு பாலியலில் ஈடுபட்ட ரஞ்சித் (17) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
அதன் பின் நடந்த விசாரணையில், பிரவீன் உஷாவை காதலித்து வந்ததாகவும், ஆனால் உஷா செல்போனில் பலரிடம் பேசி வந்ததாகவும் தெரிய வந்தது. அதனால் கொலை நடப்பதற்கு முன் தினம் பிரவீன், மற்றும் ரஞ்சித் ஆகிய இரண்டு சிறுவர்கள் கூட்டாக சேர்ந்து, உஷாவை பாலியல் துன்புறுத்தல் செய்து காலையில் வீட்டுக்கு செல்லுமாறு கூறியதாகவும், ஆனால் உஷா வீட்டுக்கு செல்ல மறுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், 'நீ பலரிடம் பழகும் உன்னை நான் எப்படி திருமணம் செய்து கொள்வது' என கூறியுள்ளார் இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்த மாணவி, உஷாவை பிரவீன் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இரண்டு பேர் அருகில் கிடந்த மரக்கட்டையால் தாக்கியுள்ளார் பின்னர் அவர்கள் கொண்டு வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த கயிறை எடுத்து பிரவீன், ரஞ்சித் இருவரும் உஷாவின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் குற்றவாளிகள் இருவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாதிரிவேடு போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2