வடமதுரை காபிரியேல் ஆலயத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

பெரியபாளையம் அருகே வடமதுரை காப்ரியேல் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

Update: 2023-04-24 03:45 GMT

பெரியபாளையம் அருகே வடமதுரை காப்ரியேல் ஆலயத்தில் இலவச மருத்துவ முகாமை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். வட மதுரையில் காபிரியேல் ஆலயத்தில் தென்னிந்திய திருச்சபை, சென்னை பேராயம், மூவரசம்பட்டு குருசேகரம் மற்றும் வடமதுரை குருசேகரம் இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது

இந்த முகாமிற்கு இரு குருசேகர தலைவர் தேவ பிரசாத், தலைமை வகித்தார். மூவரசம் பட்டு குருசேகர ஆயர் ஜான்செல்வயாபேஸ் முன்னிலை வகித்தார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இதில் மருத்துவர்கள் ஷேபன் அரசகுமார் தலைமையில் கொண்ட மருத்துவர்கள் யூஜூன்வில்சன், விஜி ஈஸ்வர தாஸ், ஏஞ்சலின் கிரேஸ்,எபுரோன் கிறிஸ்டோபர், வெங்கி, சித்ரா,10 க்கு மேற்பட்ட குழுவினரும், 40க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்கள் 500. பேருக்கு பொது மருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், பல் மருத்துவம், பல்வேறு நோய்களுக்கு ஹலோ பத்தி, மற்றும் சித்தா ஆயுர்வேதம் மூலம் இலவசமாக பரிசோதனை செய்து மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது.

இதில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஜே மூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு, எல்லாபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் வடமதுரை கே.ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் இ.கே.காயத்ரி கோதண்டன், ஒன்றிய குழு உறுப்பினர் எ.ஜமுனா அப்புன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மூவரசம்பட்டு குருசேகர செயலாளர் சாலமான் பாபு, மூவரசம்பட்டு குலசேகர பொருளாளர் மேபல்ஜெபசிங், வடமதுரை குருசேகர செயலாளர் சார்லஸ், பொருளாளர் தமிழ் மன்னன் ஆகிய உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் டி சார்லஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News