பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம்

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.;

Update: 2024-09-20 11:45 GMT

அழிஞ்சிவாக்கத்தில் இலவச பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் எஸ் ஆர் எம் மருத்துவமனை மருத்துவ கல்லூரி,ஐ.மேட்டிக் ஆப்டிக் மற்றும் ஈ சி ஐ. அற்புத நாதர் தேவாலயம் இணைந்து நடத்தும் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம் ஊராட்சியில் உள்ள ஈசிஐ அற்புத நாதர் தேவாலயத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கே. சுதாகர் தலைமை வகித்தார்.ஈ சி ஐ யின் நிவாரண மேம்பாட்டு இயக்குனர் ரூத் துரைசாமி,முன்னிலை வகித்தார். அனைவரையும் ஈ சி ஐ அற்புத நாதர்சபை போதகர் எடிசன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்குன்றம் பகுதியில் இயக்குனர் எட்வர்ட் மார்ட்டின்,பொருளாளர் ஜெரோமியா ஜெய் சிங் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர். மேற்கண்ட இம் முகாமில் பல் மருத்துவர் கிருஷ்ணா பிரகாஷ், கண் மருத்துவர் அனிதா ஆகியோரின் தலைமையில் 9.க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு150.க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பல் சுத்தம் செய்தல், சொத்தை பல் நீக்குதல்,மற்றும் கண் சம்பந்தமான பல்வேறு பரிசோதனைகளை செய்து மூக்கு கண்ணாடி மற்றும் கண் சொட்டு மருந்துகளை இலவசமாக வழங்கினர்.முகாமின் ஏற்பாடுகளை சுந்தர் சிங் செய்திருந்தார்.

Tags:    

Similar News