மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரணப்பொருட்கள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கல்
Flood Relief Material To Disabled People கும்மிடிப்பூண்டியில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 1444 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்எல்ஏ கோவிந்தராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
Flood Relief Material To Disabled People
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த சங்கமம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க கும்மிடிப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த 1444 மாற்றுத்திறனாளிகளுக்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் சங்கமம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பினர் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்க எம்.எல்.ஏ கோவிந்தராஜனிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஏற்பாடு செய்து அவர்களுக்கு பெரிஓபுளாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நிவாரண உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தார் .
தொடர்ந்து நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தை சார்ந்த ஆரம்பாக்கம், மாதர்பாக்கம், நேமலூர், செதில்பாக்கம், அயநெல்லூர், மங்காவரம், சுண்ணாம்புகுளம், பூவலம்பேடு, நத்தம், காரம்பேடு, குருராஜ கண்டிகை, ராமசந்திரபுரம், மாநெல்லூர், பண்ணூர் பெருவாயில், மேல்முதலம்பேடு, கிழ்முதலம்பேடு உள்ளிட்ட 61 ஊராட்சிகளை சேர்ந்த 1444 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்விற்கு மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக நிர்வாகிகள் ராஜா, யுவராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை சங்கமம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் தலைவர் ரகமத்துல்லா, செயலாளர் சுதாகர், துணை செயலாளர் குமார், பொருளாளர் ராஜேஷ், மாற்றுத் திறனாளிகள் ஆர்வலர் ரகோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வின் போது தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறன்களை காண சமூக தரப்பதிவுகள் கணக்கெடுக்க உள்ளதால் மாற்றுத்திறனாளிகள் தங்களின் முழு விவரங்களை துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்படைக்க வேண்டும் என்றும், இப்படி செய்வதின் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற முடியும் என கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ . கோவிந்தராஜன் அறிவுறுத்தி அனைவருக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அதேபோல் கிழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம் ஏற்பாட்டில் தெலுங்கு காலனி, கவரைப்பேட்டை, கே. எஸ். ரோடு, பழவேற்காடு சாலை, அரித்துறை, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு சுமார் 400 ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை எம்எல்ஏ ‘கோவிந்தராஜன் வழங்கினார். அவருடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழரசு, மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகி பிரசாத், ஒன்றிய கவுன்சிலர் அரிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.