கொஸ்சதலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் துண்டிப்பு: கிராம மக்கள் அவதி

தொடர் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மெய்யூர் கொஸ்சதலை ஆற்றின் தரைப்பலம் துண்டிக்கப்பட்டது.

Update: 2022-01-05 05:15 GMT

கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கால் மெய்யூர் பகுதியில் உள்ள தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலம் அம்மபள்ளியில் இருந்து மழையின் நீர்வரத்து காரணமாகவும், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை காரணமாகவும் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் அணையின் முழு கொள்ளளாவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது 2815 மில்லியன் கன தண்ணீர் இருப்பு உள்ளது.

இதனால் அணையில் 90 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ள காரணத்தினால் அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 2000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் உள்ள தரைப்பாலம் உபரி நீர் கரைப்புரண்டு ஓடியதால் துண்டிக்கப்பட்டது.

இதனால் மெய்யூர் ஆவாஜிபேட்டை, வெம்பேடு, செம்பேடு, வெங்கல், மாளந்தூர், எரையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம் அரும்பாக்கம், மேலானுர், மூலக்கரை உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் - மெய்யூர் போக்குவரத்து இன்றி அவதிப்பட்டு வருகிறார்கள். இவர்கள் திருவள்ளூர் செல்ல வேண்டுமானால் சீத்தஞ்சேரி அல்லது வெங்கல் வழியாக செல்ல வேண்டும் அவ்வாறு இவர்கள் செல்ல 15 முதல் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றிகொண்டு செல்ல வேண்டும், மேலும் உடைந்த பாலத்தை மக்கள் யாரும் கடக்காமல் இருக்கவும் அதனால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் சாலையின் இரு புறமும் தடுப்பு அமைத்து காவல் துறையினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News