கும்மிடிப்பூண்டி அருகே பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-04-29 02:00 GMT

கலாதேவி

விருதுநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கலாதேவி(26) மருத்துவர். இவர் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம்.கவரப்பேட்டை தனியார் கிளினிக்கில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மேலும் அதே பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் கலாதேவி நேற்று மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்துவிட்டு செவிலியரிடம் நோயாளி கவனித்து கொண்டிருங்கள் என்று கூறி அவர் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் மருத்துவமனைக்கு வராததால் சந்தேகம் அடைந்த செவிலியர் ஒருவர் மருத்துவர் தங்கியிருந்த ஆறைக்குள் சென்று பார்த்தபோது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

இதுகுறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் இருந்த கலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து மருத்துவரின் செல்போனை ஆய்வு செய்து எதற்காக மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற பல்வேறு கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News