கும்மிடிப்பூண்டி அருகே இடி விழுந்து விவசாயி பலி!
கும்மிடிப்பூண்டி அருகே செதில்பாக்கம் கிராமத்தில் இடி விழுந்து விவசாயி பலியானார்;
கும்மிடிப்பூண்டியை அடுத்த செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் (28). இவர் அந்தப் பகுதியில் விவசாயம் செய்து வந்தார்.
இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் திடீரென இடி இடித்ததில் சாமுவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.