கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
Education Minister School Surprise Visit கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.
Education Minister School Surprise Visit
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் கே.எல்.கே. அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கும்மிடிப்பூண்டி சுற்றியுள்ள ஆத்துப்பாக்கம், பெத்திக்குப்பம், ரெட்டம்பேடு, அயநெல்லூர், சோழியம்பாக்கம், மங்காவரம், நத்தம்,அரசூர், குருவிஅகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந் நிலையில் வழக்கம்போல் பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளி வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் ஆகியோர் உள்ளே சென்று பார்வையிட்டனர்.
அப்போது மாணவர்கள் தினந்தோறும் நடக்கும் செய்திகள் மற்றும் பொது அறிவுகள், திருக்குறள் ஆகியவற்றை ஒவ்வொருவராக எடுத்துக் கூறினார்.அதன் பின்பு அமைச்சர் சமையலறை, வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம், பழைய கட்டிடங்கள் ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து அப்போது தலைமை ஆசிரியரிடம் மேற்கண்ட பள்ளியில் கழிப்பறை விளையாட்டு மைதானம் சரிவர இல்லை என்பதும் அதனை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்டதோடு இந்த பள்ளிக்கு சுற்றுசுவர் எழுப்புவதாக கூறிய பின்னர் ஆசிரியர்கள் வருகை பதிவை பார்வையிட்டார்.
தொடர் விடுமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கு கேட்டிருந்தார் அதற்கு தலைமை ஆசிரியர் ராமமூர்த்தி தட்டு தடுமாறி பதில் கூறிய உடன் திரும்பிச் சென்றார்.அதைத்தொடர்ந்து முன்னாள் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவு மான கும்மிடிப்பூண்டி கி.வேணு மறைவையொட்டி அவருடைய பனப்பாக்கம் வீட்டுக்கு நேரில் சென்று திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கி.வே ஆனந்தகுமாருக்கு ஆறுதல் னர்சொல்லி கழகம் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அதேபோன்று மாநில தகவல் தொழில்நுட்பத் அணி இணை செயலாளர் சி. எச்.சேகர் தாயார் மறைவையொட்டி ம. பொ. சி நகர் பகுதியில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியை அளித்தது பின்வருமாறு5ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிகள்கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுசெயல்படுத்தி தொடர்ந்து வருவதாகவும்,பள்ளிகளில்ஒழுங்கீனமாக மாணவர்கள் நடப்பதை தடுக்கும் வகையில் போதை பொருள் பயன்படுத்துவதை தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம்,பகுதி நேர ஆசிரியர்கள்வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது மேலும் தமிழகம் முழுவதும் இடமாற்றம் வழங்கப்படாமல் இருந்தது அதனை தற்போது வழங்கி அவர்களுக்கான ஊதியத்தை 2500 ரூபாய் உயர்த்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.