ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுகவினர் திண்ணை பிரசாரம்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் திமுக வேட்பாளர்கள் திண்ணை பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்;
வரும் 19ஆம் தேதியன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ஊத்துக்கோட்டை பகுதியில் திமுக கழக முன்னாள் நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 14.ஆம் வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சுமலதா நரேஷ் குமாரை ஆதரித்து முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் கன்னிகை ஜி.ஸ்டாலின், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் என்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் வீடு வீடாகச் சென்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் தற்போது திமுக ஆட்சி அமைந்து 8.மாத காலத்தில் மக்களுக்கு திமுக அரசு செய்து வரும் நல்ல திட்டங்களைப் பற்றி எடுத்து கூறி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் எனம்பாகம் சம்பத், சந்திர பிரகாஷ், பாபு, நெடுஞ்செழியன், ஜெயசீலன், ஆனந்த், மற்றும் கழக முன்னோடிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்