பைக் பேரணியில் வந்த தி.மு.க. இளைஞர் அணியினருக்கு உற்சாக வரவேற்பு
தி.மு.க. இளைஞர் அணியின் பைக் பேரணிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17 தேதி நடக்கிறது. இதில் அதிக அளவில் இளைஞர்களை திரட்டவும் , நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரியும், கன்னியாகுமாரியில் கடந்த 15 ம்தேதி பைக் பேரணி தொடங்கியது. இந்த பைக் பிரச்சார பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
தமிழகத்தை 4 மண்டலமாக பிரித்து ஒவ்வொரு மாவட்டம் தோறும் தொகுதி வாரியாக தி.மு.க. இளைஞரணியினர் 155 பேர் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பேரணி நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதி பூண்டி ஒன்றியம் ஒதப்பை, சீத்தஞ்சேரி மற்றும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிக்கு வந்தது இந்த பைக் பேரணியில் வந்தவர்களை ஊத்துக்கோட்டை பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமையில்.மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி. லோகேஷ் ஏற்பாட்டில் பூண்டி ஒன்றிய செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், ஜான். பொன்னுசாமி, பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் ,சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ ' குடை ' வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அவைத்தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயராமன், துணைச்செயலாளர் திரிபுர சுந்தரி, மகளிரணி பிரபாவதி, மாவட்ட பிரதிநிதிகள் சீனிவாசன், சம்சுதீன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் கோல்டு மணி, திலீப், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் தமிழ் செல்வன், அப்துல் பரீத், இளைஞரணி அமைப்பாளர் ரகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பைக் பேரணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள பெரியபாளையம் பகுதிக்கு வருகை தந்த போது இந்த இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞரணிக்கு எல்லா பெரும் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ. மூர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன், பேரணியாக வந்த இளைஞர் அணியினருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்து அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினார். இதில் நிர்வாகிகள் ராமமூர்த்தி, தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் கண்ணிகை ஸ்டாலின், சம்பத், ரவி குமார், வழக்கறிஞர்கள் சீனிவாசன், முனுசாமி, ராஜா, அப்புன், ராஜா, உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கன்னிகை பேர் பகுதிக்கு வருகை தந்த இளைஞரணியினருக்கு ஒன்றிய செயலாளர் சத்திய வேலு மாலை மற்றும் சால்வை அணிவித்து சிற்றுண்டி வழங்கினார். இதில் மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், அவைத் தலைவர் முனிவேல் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.