பழுதடைந்த வட்டாட்சியர் அலுவலக கட்டிடம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கும்மிடிப்பூண்டியில் பழுதடைந்த வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-02-11 03:30 GMT

பழுதடைந்த கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக கட்டிடம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்தி குப்பம் பகுதியில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் கடந்த 1986 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும் 37 ஆண்டுகள் ஆகிறது. இந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள ஆரம்பாக்கம், ஆத்துப்பாக்கம்,ஏளாவூர், மாதர்பாக்கம், எகுமதுரை,ஏடூர், ஓபோ சமுத்திரம், கண்ணன் கோட்டை, கரடிப்புத்தூர், கீழ்முதலாம் பேடு, குருவட்டுச்சேரி, கொள்ளாலூர், சூரப்பூண்டி, சிறு புழல் பேட்டை, கவரப்பேட்டை, புது வாயில், உள்ளிட்ட சுமார் 63 கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டா, பிறப்பு மாற்றம் இறப்பு சான்றிதழ் வாங்க பல்வேறு குறைகளை கூற நாள்தோறும்  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் 37.ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது இந்த வட்டாட்சியர் கட்டிடம் பலவீனமடைந்து கட்டிடத்திற்குள் பல்வேறு இடங்களில் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு கட்டிடத்தில் உள்புற மேல் தளத்தில் சிமெண்ட் பூசுகள் பெயர்ந்து காணப்படுகிறது.

இது தவிர கட்டிடத்திற்கு சுற்றி அடர்ந்த புதர்கள் வளர்ந்தும் வெளிப்புற சுவர்களில் சிமெண்ட் கான்கிரீட் உதிர்ந்து மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடம் சுற்றி புதர் மண்டிகள் வளர்ந்துள்ளதால் அவற்றிலிருந்து விஷ பூச்சிகள் பாம்புகள் என சேர்ந்து விடுகிறது.

சில நேரங்களில் பாம்புகள் உள்ளே வருகிறது என்று அங்கு வந்து செல்லும் மக்கள் சிலர் கூறி வருகின்றனர். இதனை அடுத்து உதிர்ந்த சிமெண்ட் பூசுகளை அகற்றி கண் துடிப்பாக ஆங்காங்கு பூசப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிவறைகள் அசுத்தமாக மாரி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொது மக்களும் பெண்களும் அலுவலகத்தில் பணி செய்யும் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும் மக்கள் குடிப்பதற்கும் தண்ணீரும் வைக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கண்டுகொண்டு இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசு அலுவலர்கள் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News