ஊதிய உயர்வை கேட்டு தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் காற்றாலை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில், ஊதிய உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-07-03 03:00 GMT

ஊதிய உயர்வை கேட்டு தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் வினோ மெக்கானிக்கல் என்ற காற்றாலை உற்பத்தி செய்ய தொழிற்சாலை 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இதில் சென்னை, ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், செங்குன்றம்,நெல்வாய், பீகார், ஒரிசா உள்ளிட்ட இடங்களை சேர்ந்த நிரந்தரமாக்கப்பட்ட தொழிலாளர்கள் 110 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 50 பேருக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த தொழிலாளர்கள் ஆரம்ப காலகட்டத்தில் 2008 ஆண்டு முதல் 2500 ரூபாய் ட்ரைனிங் ஆக பணியாற்றி தற்போது பத்தாயிரத்துக்கும் மேல் ஊதியம் பெற்று தன் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இதில் மேற்கண்ட தொழிலாளர்கள் வினோ மெக்கானிக்கல் தொழிலாளர்கள் முன்னேற்ற தொமுச சங்கம் வைத்துள்ளனர்.

ஒவ்வொரு மூன்று ஆண்டும் ஊதிய உயர்வு பற்றி பேசுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டும் ஊதிய உயர்வு பற்றி தொழிற்சங்கம் கடிதம் கொடுத்தும் மூன்று மாதம் காலம் ஆகியும் காலம் தாழ்த்தி வருவதும், தொழிலாளர்களை மிரட்டுவதும், அடிமையாக நடத்த வேண்டும் ஒரே எண்ணத்தோடு தொடர்ந்து தொழிலாளர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கின்றனர்.இது சம்பந்தமாக தொமுச சார்பில் தொழிலாளர் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டநிலையில் தொழிற்சாலையை கண்டித்து தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு தொமுச சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்க சிறப்பு தலைவர் எஸ். ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வினோ மெக்கானிக்கல் தொமுச சங்க செயலாளர் எஸ். வேலு, வரவேற்றார்

ஒன்றிய செயலாளர் பேருர் செயலாளர் அறிவழகன், கும்மிடிப்பூண்டி பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் ஆர். சிவகுமார் தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக், மாவட்ட தொழிலாளர் அணி நிர்வாகி அறிவழகன், மாவட்ட கவுன்சிலர் எஸ். ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலர் எம். ஜெயச்சந்திரன், பேருராட்சி துணை தலைவர் கேசவன், டால்மியா கரும்புகுப்பம் ராமு , வினோ மெக்கானிக்கல் நிர்வாகிகள் வெங்கடேசன், அமுல்ராஜ், பாஸ்கரன், ராகவன், திமுக மாவட்ட விளையாட்டு துறை அணி துணை பரத்குமார், முகிலன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி பொது தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொது செயலாளரும் சட்ட அலுவலருமான மு. மணிபாலன், வினோ மெக்கானிக்கல் சங்க காப்பாளர் எஸ். ரமேஷ் கண்டன உரை ஆற்றினர் .

அப்போது சட்ட அலுவலர் வழக்கறிஞர் மணிபாலன் பேசுகையில், தொழிற்சாலையில் லாபத்திற்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவது தொழிற்சாலையின் கடமை , தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும், இதனை வினோ மெக்கானிக்கல் தொழிற்சாலை உள்ளிட்ட கும்மிடிப்பூண்டியில் பல்வேறு தொழிற்சாலைகள் பின்பற்றுவதில்லை என்ற அவர், தொழிற்சாலை நிர்வாகத்தினர் தொழிலாளர்களின் நலனை காக்காமல் தொழிலாளர்களுக்கிடையே வேற்றுமைகளை ஏற்படுத்தி தொழிற்சங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் வேலையை பார்ப்பது தொழிலாளருக்கு இழைக்கும் அநீதி ஆகும், தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்பது அவர்களின் உரிமை என்பதால், தொழிற்சாலை நிர்வாகத்தார் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்றார்.

இதில் டால்மியா, சாக் இன்டஸ்ட்ரீஸ், எம்ஐஎல், ரூஃபிட், சுனோசம் கம்பெனி, இசிஎல் நிர்வாகிகள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். வினோ மெக்கானிக்கல் துணை தலைவர் எஸ். பாஸ்கர் நன்றி கூறினார்.

Similar News