பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர கோரிக்கை

பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித் தர பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-02-03 14:45 GMT

பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாழடைந்த வகுப்பறை  

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோவில் அருகே அரசு மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பெரியபாளையம், வடமதுரை, ராள்ளபாடி, தண்டலம், ஏனம்பாக்கம்,நெல்வாய், எம்.என்.சத்திரம் வண்ணான்குப்பம்,  பணப்பாக்கம், ஆத்துப்பாக்கம், அரிய பாக்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 1100.க்கும் மேற்பட்ட மாணவி மாணவர்கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் 1976.ஆம் ஆண்டு 10 வகுப்பறைகள் கொண்ட சிமெண்ட் ஓடு கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டடம் கட்டி  சுமார் 52 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இக்கட்டிடம் பழுதடைந்து அதில் பள்ளியின் பழைய மரத்தால் செய்யப்பட்ட மேஜைகள் மற்றும் ஆசிரியர்கள் அமரும் நாற்காலிகள் பழைய பொருட்களை பழைய வகுப்பறைக்குள் உள்ளே போடப்பட்டுள்ளது

இதில் சில நேரங்களில் விஷத்தன்மை கொண்ட பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகள். வந்து தங்கி விடுகிறது. எனவே இந்த பழைய கட்டிடத்தில் உள்ள பழைய பொருட்களை வெளியேற்றி கட்டடத்தை அகற்றி புதிய கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தர வேண்டுமென பள்ளியில் படிக்கின்ற மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் கூறுகையில், பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ளது இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இரந்து சுமார் 1100.க்கு மேற்பட்ட மாணவி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிட வளாகத்தில் சுமார் 52 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் பழைய பொருட்கள் போடப்பட்டுள்ளதால் அடிக்கடி இதில் பாம்பு, தேள் உள்ளிட்டவை தங்கி அடிக்கடி வெளியே வருவதால் மாணவர்கள்  நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது.

மேலும் இந்த கட்டடம் விஷ பாம்பு பூச்சிகளுக்கு ருப்பிடமாக மாறியுள்ளது. இதனால் ஓடு போட்ட கட்டடம் விரிசல் விட்டு கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தை அகற்றி கூடுதல் கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்று பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் நலனை கருதி சம்பந்தப்பட்ட துறை கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்குமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Tags:    

Similar News