சிறுவாபுரி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்

பெரியபாளையம் அருகே சிறுவாபுரி முருகன் கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-04-10 02:30 GMT

சிறுவாபுரி முருகன் கோவில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு. அவருடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்து கொண்ட பக்தர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த சின்னம்பேடு சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6.வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

செவ்வாய்க்கிழமையான நேற்று அதிகாலை முருகனுக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர், ஜவ்வாது,தேன், பன்னீர் உள்ளிட்ட வாசன திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பட்டு உடையை காலம், வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது நேற்று யுகாதி பண்டிகை விடுமுறை தினம் என்பதால் சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.சுமார் 4மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகர் யோகிபாபு சிறுவாபுரி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். கோவிலில் வழிபாடு செய்த யோகிபாபுவுடன் பக்தர்கள் ஆர்வமுடன் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Similar News