கும்மிடிப்பூண்டி அரசு பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள போந்தவாக்கம் அரசு பள்ளியில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது/ இதில் 10 முதல் 12 வகுப்பு மாணவ மாணவிகள் 220 பேர் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் இப்பள்ளியில் 15 முதல் 18 வரையிலான மாணவ - மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர் பால மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.
இதில் சுகாதாரத்துறை இயக்குனர் ஜவஹர்லால், பூண்டி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர் சுதாகர்,ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு,இளைஞரணி அமைப்பாளர் தில்லைகுமார், பள்ளி துணை ஆய்வாளர் சவுத்திரி, மாவட்ட பிரதிநிதி சிவய்யா, சலபதி கேசவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்செல்வம். ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.