சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் -எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்
கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.;
15-18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த பதினைந்து முதல் பதினெட்டு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கி.வே.ஆனந்தகுமார், பள்ளி தலைமையாசிரியர் ஐயப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், கீழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே .ஜி. நமச்சிவாயம், ஊராட்சி செயலாளர் சாமுவேல் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முகாமில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ. கோவிந்தராஜன் பங்கேற்று தடுப்பூசி முகாமை துவக்கி வைத்ததோடு மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துக்கூறி உற்சாகமூட்டினார்.
இந்த முகாமில் 671 மாணவ மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 125 மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை கும்மிடிப்பூண்டி ஒன்றியக்குழு துணைத் தலைவர் மாலதி குணசேகரன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் 247 மாணவ மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
அவ்வாறே ஏ.என். கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 116 மாணவ மாணவிகளுக்கும் , சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 86 மாணவ மாணவிகளுக்கும், ஆரம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 127 மாணவ மாணவிகளுக்கும், புதுகும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகளுக்கும் என 1512மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மாணவர்களுடைய பெற்றோர்கள் ஒப்புதலுடன் இந்த தடுப்பூசி போடப்படுவதாகவும் விடுபட்ட மாணவர்களுக்கு பெற்றோர்கள் ஒப்புதலுடன் விரைவில் தடுப்பூசி போடப்படும் என்று நிகழ்வின்போது கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.