மீஞ்சூரில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-09 03:00 GMT

மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தின் கவுன்சிலர்கள் முதல் மாதாந்திர ஆலோசனைக்கூட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி ஆணையர் ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஒன்றிய கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

ஒன்றிய அலுவலகத்தில் செலவு கணக்கு வழக்குகள், தற்போதைய கையிருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தற்போதைய நிதி இருப்பை வைத்து ஒட்டுமொத்த ஊராட்சி பகுதிகளில் எவ்வாறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, நிதி பற்றாக்குறையை சரி செய்வதற்கு தனியார் நிறுவனங்கள் எம்.பி, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை எவ்வாறு பெற்று வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதா தேவி, மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News