கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 94ஆயிரம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நெல்லூரில் இருந்து சென்னைக்கு பழ வியாபாரி ஜனார்த்தன் குமார் (44) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ. 94 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது.பின்பு அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அதனை வட்டாட்சியர் பாலகுருவிடம் படைத்தனர்.