ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ. 84 ஆயிரம் பறிமுதல்

Update: 2021-04-06 10:00 GMT

கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த 84 ஆயிரம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது.

கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் நேற்று இரவு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒருவரிடம் சுமார் 84 ஆயிரம் பணம் இருந்தது தெரிய வந்தது. மேலும் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News