கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக புகார்

கும்மிடிப்பூண்டி அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-13 09:53 GMT

உயிரிழந்த மகேஷ்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திக்குப்பம் ஊராட்சிஎம் ஜி ஆர் நகர் நகரைச் சேர்ந்தவர் தனபால் - விஜியா தம்பதியர். இவர்களுக்கு கணேஷ் , சரவணன் மற்றும் மகேஷ் ஆகிய மூன்று மகன்கள் உள்ள நிலையில் மூன்றாவது மகன் மகேஷ் ( வயது 30) என்பவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக இரும்பு துண்டுகள் பற்றை வைக்கும் வெல்டிங் வேலை செய்து வந்தார்.


இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பும் போது மகேஷுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மகேசுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அருகாமையில் உள்ள ஆல்பா என்கிற தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

மருத்துவர் இல்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் செவிலியரை வைத்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.சிகிச்சை அளித்த 10 நிமிடங்களில் மகேஷ் கை கால்கள் இழுக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு மகேஷ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் மகேஷ் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி மகேசின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆல்பா தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் சமரசம் செய்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதை தொடர்ந்து மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நோயாளிகள் பதிவேட்டில் உயிரிழந்த மகேஷின் பதிவில் முரண்பாடுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இசம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News