ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்திற்கு எதிராக கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-29 10:31 GMT

ஸ்மார்ட் மின் மீட்டருக்கு எதிராக கும்மிடிப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கும்மிடிப்பூண்டியில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஒன்றிய பா.ஜ.க. அரசு மின்சார சட்டம் 2022 ஐ கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்திய நாடு முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மின் மீட்டர் 2025 டிசம்பர் 31 ல் அனைத்து வீடுகளிலும் பொருத்த வேண்டும் என பா.ஜ.க. அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.

இந்த ஸ்மார்ட் மின் மீட்டரை தமிழகத்திலும் பொருத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே அனைத்து மின் இணைப்புகளுக்கும் மின் மீட்டர் பொருத்தப்பட்டு துல்லியமாக கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தப்பட்டால் விவசாய பம்ப்செட்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் ரத்தாகும். வீடுகளுக்கு வழங்கும் மின்சாரத்தில் தமிழ்நாடு அரசு 100 யூனிட் மின்சாரம் தற்போது இலவசமாக வழங்கி வருவதும் ரத்தாகும்.மின்சார வாரியம் தனியாருக்கு விற்கப்படும், காலை, மாலை நேரங்களில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும்.செல்போனில் ப்ரீபெய்ட் கார்டு போட்டு பயன்படுத்துவது போல, மின்சாரத்தை பயன்படுத்த முன்னரே பணம் செலுத்தி வாங்க வேண்டும் இது போன்ற ஆபத்தான நிலைக்கு மக்களை கொண்டு செல்கிறது.

இந்த நிலையில் மோடி அரசு கொண்டு வந்துள்ள ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்தும் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று மாலை கும்மிடிப்பூண்டியில் உள்ள மின் உதவி செயற்பொறியாளரிம் மனு அளித்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கவரப்பேட்டை உதவி செயற்பொறியாளிடமும் மனு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வட்டக் குழு உறுப்பினர்கள் டி.கோபாலகிருஷ்ணன், ப.லோகநாதன், ஜோசப், குப்பன், சீனு, எல்ஐசி ஊழியர் செல்வகுமார், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News