3 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட ரோடு குண்டும்குழியுமாக மாறியதால் அம்பேத்கர் நகர் பொதுமக்கள் பாதிப்பு
Road Damage- திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் புதிய தார்ரோடு போடப்பட்டது. தற்போது மழைக்காலம் ஆனதால் ரோடுகளில் குண்டும் குழியுமாகவே மாறிவிட்டதால் வாகனங்கள் செல்ல வழி இல்லாதநிலையே ஏற்படுகிறது. எனவே இந்த ரோட்டினை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
Road Damage- திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதனை எடுத்து குறிப்பாக பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார 650 குடும்பங்கள் வசிக்கின்றனர் இப்பகுதியில் 2018.19 நிதியாண்டில் 500 மீட்டர் நீளமுள்ள தார் சாலை ₹.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு தற்போது பெய்து வந்த மழையில் ரோடு பெயர்ந்து அதில் உள்ள கற்கள் வெளியே தெரிந்த படி ஆபத்து விளைவிக்கும் வகையில் ரோடு மாறியது .
இப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும்போது, அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோடானது சமீபத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக குண்டும் குழியுமாக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ரோட்டின் பெரிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்று தெருவிளக்குகள் சரி வரை இயங்காத நிலையில் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் பள்ளங்களின் விழுந்து படுகாயம் அடைந்ததாகவும் இது குறித்து பலமுறை மாவட்ட மற்றும் வட்டார வளர்ச்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர் எனவே தற்போதாவது பருவ மழை பெய்வதற்கு முன்பேரோட்டினை சீரமைத்து நல்ல தரமான புதிய ரோடு அமைத்து தர வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2